Wiary Of A Mad Man

பெருமிதப் புன்னகை

October 19, 2008 · Leave a Comment

இலையுதிர் காலம் அந்த வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டிருந்தது.  சுற்றியிருந்த பல மாடி கட்டடங்களின் மத்தியில், இந்த வீடு வித்தியாசமாக காட்சியளித்தது. காரை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, மேட்டிலிருந்த வீட்டை நோக்கி மெதுவாக நடந்தேன். கீழே உயிர் விட்டிருந்த இலைகளை பார்க்க பரிதாபமாக இருந்தது.

”டக் டக்….”

”யெஸ் கம் இன்”

உள்ளே மூன்று பாட்டிகள் உட்கார்ந்திருந்தார்கள்.

”ஸாண்ட்ரா”

“இதோ இவர்தான்” என்று குள்ளப் பாட்டி ஆஜானுபாகுவான பாட்டியைக் காட்டினாள்.

“ஓ நீங்கள் தான் சற்று முன் போன் செய்திருந்தீர்களா” வயதும் சிகரெட்டும் போட்டி போட்டுக் கொண்டு தேய்த்திருந்த கரகரப்பான குரலில் கேட்டாள் ஆஜானுபாட்டி. ஆறடி உயரம். தாட்டியான உடம்பு.  உயரத்தால் ஏற்பட்ட சிறு கூன். கறுப்பு ப்ரேமிட்ட தடிமனான மூக்குக் கண்ணாடி.

“ஆம்…இன்னிக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கிறேன், அதனாலதான் நேர்லயே வரலான்னுட்டு…”

“வீட்டிலிருந்து வேலையா !!!”

”ஆமாம்…என் கம்ப்யூட்டர்ல தேவையான சாப்ட்வேர் இருக்கு…குறிப்பா வி.பி.என் அப்படின்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு அத வச்சி என்னோட ஆபிஸ் கம்ப்யூட்டர்ல இருக்கற ப்ரோக்ராமெல்லாம் ரன் பண்ணலாம்.

“ஹூம்…ஏதோ சொல்ற. ஒண்ணும் புரியல. ஆனா ஒண்ணு ‘வீட்டிலேர்ந்து வேல’ பாத்தா இந்த மாதிரி சில்லர வேலையெல்லாம் முடிச்சிடலாம்” என்று நமுட்டாக சிரித்தாள்.

”ஆமா எனக்கு கேசும்(gas) மிச்சம்…நாடு இருக்கற நிலமைல இதுதான் போனஸ்” நானும் பதிலுக்கு சிரித்தேன்.

சிறிய  மெளனம்.

“இந்த பாங்குகளோட ஒரே தொல்ல….நேத்து இருந்த பாங்க் இன்னக்கி இல்ல…பேரு வேற அடிக்கடி மாறுது. இதுல, இன்ஷுயுரன்ஸ் பாலிசில ஒழுங்கா அட்ரஸ் இல்லன்னா, ஃபைன் போடறாங்க. ஒங்க பாங்கிலிருந்து வந்த லெட்டர காட்டுங்க, பாலிசில கரெக்ட் அட்ரஸ் மாத்திடறேன்”

பேப்பரை நீட்டினேன்.

பேப்பரை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்றாள் பாட்டி.

பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்னால் மாட்டியிருந்த கறுப்பு-வெள்ளை புகைப்படம் தெளிவாக தெரிந்தது.

முதுகிற்கு பின்னால் சிகரெட் வாடை அடித்தது. நான் பார்ப்பதை பாட்டியும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“படத்தில் இருக்கும் இந்த அழகான பெண் யார்?” என்று விடை தெரிந்து கொண்டே கேட்டேன்.

“நாந்தான்…1968ல எடுத்தது இது. இதோ இங்க என் பக்கத்துல ஒருத்தர் நின்னுகிட்டுருக்காரே அவர்தான் இப்ப இருக்கற முதலாளியோட அப்பா…அதோ அங்க ஒக்காந்துகிட்டிருக்காரே அவர் முதலாளியோட தாத்தா. போன மாசம் என்னோட பிறந்த நாள் அன்னிக்கு எனக்கு தெரியாம ஸர்ப்ரைசாக இந்த படத்த மாட்டிட்டாங்க”. பாட்டியின் கண்களில் புன்னகை.

→ Leave a CommentCategories: people · tamil · தமிழ்
Tagged:

Dont live in a town that doesn’t have a library

October 13, 2008 · 2 Comments

In any city, a library has always been my favorite place. Even if Google digitizes all the books in the world, i’ll still be going to libraries. There is a saying in my mother tongue (Tamil) which loosely translates to “Don’t live in a town that does not have a temple”, i think for me it will be “Dont live in a town that doesn’t have a library”. One of my favorite pastimes is to aimlessly stroll around the aisles of the library and browse through random books. During these strolls i often find hidden treasures. In my latest stroll i found one such treasure. It was a book called “Reflections”  – a collection of quotes from Herman Hesse.

I came across Hesse when i was seventeen or eighteen. I remember, in those days i was going behind philosophical/psychological books, books like “Zen and the art of motorcycle maintenance” and “I Am Ok, You are Ok”. I don’t know if i understood them then (and i don’t know if i understand them now !!!). I liked the name “Siddhartha” and probably that could be the reason why Hesse’s “Siddhartha” attracted me. I think i got hold of the book from Ramanashram Library at Thiruvannamalai. Later when i came to US, i saw the movie version of the book (Shashi Kapoor as Siddhartha). It is difficult to say if the book and the movie made a deeper impression on me, but i then made a note that i should read more Hesse. And “Reflections” gives Hesse in a nutshell.

Here are few of my favorite quotes from “Reflections”:

  • Some people regard themselves as perfect, but only because they demand little of themselves.
  • Time and time again we have clinged to the things we learned to love; we call this fidelity, but it is only inertia.
  • Practice ought to be the consequence of thought, not the other way round.
  • I hold that I am not responsible for the meaningfulness or meaninglessness of life, but that I am responsible for what I do with my own life.
  • Deeds – are never done by one who first asks, “What should I do?”
  • Generally speaking, the enemies of good books and of good taste are not those who despise books but those who read anything and everything.
  • Those who have no appreciation of poetry are sure to overlook what is finest and most beautiful in the language of good prose.
  • With reading it is the same as with every other pleasure: the more fervently and lovingly we give ourselves to it, the deeper and more lasting the pleasure will be.
  • Every politician in the world is all for revolution, reason, and disarmament – but only in enemy countries, not in his own.
  • I like to think of myself as a patriot, but even more so as a man. Where the two disagree, i say the man is right.
  • When we hate someone, it is because we hate some part of ourselves in his image. We don’t get excited about anything that is not in ourselves.
  • When we fear someone, it is because we have given this someone power over us.
  • Knowledge has no ultimate goals; its progress is merely is merely a greater differentiation in the questions raised.
  • The only part of a story that is true is the part the listener believes.
  • A profession is always a misfortune, it means limitation and resignation.
  • The world has often been condemned as evil because someone has slept badly or eaten too much. The world has often been glorified because someone has just kissed a girl.
  • I need no weapon against death, because there is no death. What does exist is the fear of death. That can be cured.

Related links:

http://www.amazon.com/gp/reader/0553208845/ref=sib_dp_pt#reader-link

http://www.youtube.com/watch?v=OyFg291i8Ak

http://www.amazon.com/Reflections-Hermann-Hesse/dp/0374510822/ref=sr_1_2?ie=UTF8&s=books&qid=1223874822&sr=1-2

→ 2 CommentsCategories: books
Tagged: , , ,

மூன்று இராமானுஜர்கள்

September 14, 2008 · Leave a Comment

‘பெயர் ராசி’யில் எனக்க்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இராமானுஜம் என்ற மூன்று பெரியவர்களைப் பற்றி படிக்கும் போது ‘பெயர் ராசி’ என்று ஒன்று இருக்குமோ என்று சந்தேகப் படத் தோன்றுகிறது. இதோ என்னைக் கவர்ந்த மூன்று இராமானுஜர்கள்.

மூதலாமவர், 11-12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர். தமிழ் வளர்த்தவர். புரட்சியாளராக அறியப்பட்டவர். இவர் வாழ்க்கைக் குறிப்பில் எனக்கு பிடித்த ஒன்று – பல தடவை அலைக்கழிக்கப் பட்ட பின்,  திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம், மந்திர உபதேசம் பெறுகிறார் இராமானுஜர். நம்பி,  “இந்த மந்திரம் பரம ரகசியம். அதிக பலன் வாய்ந்தது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதென்றால், மிகவும் ஜாக்கிரதையாக, குல கோத்திரம் அறிந்து உபதேசம் செய்” என்கிறார். இராமனுஜரோ, “இது அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் என்றால், இதனால் எல்லோரும் பலன் அடைய வேண்டும், ஒரு சாராருக்கு மட்டும் போய்ச் சேரக் கூடாது” என்று எண்ணுகிறார். உடனே (திருக்கோஷ்டியூர்) கோவிலின் கோபுரத்தின் மேல் ஏறி, ஊரைக் கூட்டி எல்லோருக்கும் அந்த மந்திரத்தை அளிக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாமவர், கணித மேதை ஸ்ரீநிவாஸ ராமனுஜன்.  20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர். முப்பத்து மூன்று வயதிற்குள் பல கணிதக் கோட்பாடுகளுக்கு பங்களித்தவர். அவர் அப்போது எழுதி  வைத்து  விட்டுப் போன நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு  பல கணித வல்லுனர்கள் இப்போதும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் ராமனுஜத்தின் வாழ்க்கையைப் பற்றி மிக அருமையான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் ஒன்று.

மூன்றாமர், பேராசியர் A.K.ராமானுஜம் (1929-1993). சிகாகோ பழ்கலைக் கழகத்தில் மொழியியலாளராக பணியாற்றியவர்.  பல சங்க இலக்கிய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நம்மாழ்வார் பாசுரங்களை “Hymns for the drowning” என்று மொழிபெயர்திருக்கிறார்.  நாட்டுப்புற கலைகளிலும் கதைகளிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்.  கர்னாடக மாநிலத்து நாட்டுப்புற கதைகள் சிலவற்றை தொகுத்து ”A Flowering Tree and Other Oral Tales from India” என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார். சுவையான சிறுகதைகள் அடங்கிய தொகுதி. எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று:

கிராமத்துக் கோவிலில் உபன்யாசகர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் ”விலைமாதர்களிடம் போவதற்கு தண்டனையாக நம்முடைய பழம் நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? நரகத்தில் குறுகிய காதுடைய (ஓட்டை) ஒரு ஊசி ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டை வழியாக திணித்து நசுக்கப் படுவீர்கள். பார்த்து நடந்து கொள்ளுங்கள்”. சொற்பொழிவு முடிகிறது.  ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார் சொற்பொழிவாளர். சொற்பொழிவாளரின் ஆசை நாயகியின் வீடு. “ஸ்வாமி, சற்று நேரத்திற்கு முன் தான் ஊசி தண்டனையைப் பற்றி கூறினீர்கள். மனைவியை விட்டு விட்டு என்னிடம் வரும் உங்களுக்கும் அந்த கொடிய தண்டனை கிடைக்குமல்லவா. தங்களுக்கு பயமில்லையா?” என்று கேட்கிறாள் ஆசைநாயகி. அதற்கு உபன்யாசகர்  “போடி பைத்தியமே, நான் போறதுக்குள்ள, இந்த ஊர்ல இருக்கறவன்லாம் நுழஞ்சு ஊசியோட ஓட்டை பெருசாயிடும். ஒட்டைக்குள்ள சுலபமாக போயிட்டு வந்திருவேன், நீ வாடி என் ஆசைக் கிளியே” என்று தன் ஆசை நாயகியை கட்டித் தழுவினார்.

→ Leave a CommentCategories: people · tamil · தமிழ்
Tagged: ,

இலந்தை வடையும் உலகமயமாக்கலும்

September 1, 2008 · Leave a Comment

மாங்காயைக் கண்ட மசக்கைக்காரி போல், அந்த சிகப்பு நிற பாட்டிலைத் தாவி எடுத்து என் கூடையில் போட்டுக்கொண்டேன். காரணம், பாட்டிலின் மேல் ஆங்கிலத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள் - ”மாங்காயிஞ்சு ஊறுகாய்”.  இரவு உணவின் போது, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள, பெரிய கரண்டி ஒன்றினால் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஆள்காட்டி விரலினால் வழித்து எடுத்து வாயில் வைத்தேன். பெரும் ஏமாற்றம். பாட்டிலை எடுத்து கவனமாகப் படித்தேன். ”மாங்காய் இஞ்சு” என்று எழுதியிருந்தது.  பாட்டிலின் மேல் ஒட்டியிருந்த வண்ணப் படத்தில் மாங்காயும் இஞ்சியில் என்னைப் பார்த்து தனித் தனியாக கேலி செய்தன.

பத்து வருட அமெரிக்க வாழ்வில் மறந்து விட்ட சுவைகள் பல.  இந்தியப் பயணத்தில் போது சிலவற்றை சுவைக்க வாய்ப்புகள் கிடைக்கின்றது.  சிலவற்றை உணவு வகைகள் சுவைக்கக் கிடைப்பது கடினம்.  எழுதி வைத்து விட்டு மறந்துவிட வேண்டியதுதான்.  இதோ நான் எழுதி வைக்க விரும்புவைகளில் சில:

இலந்தை வடை:  பாட்டிக்கு மாத்திரம் எப்படிக் கிடைத்ததோ அவை தெரியவில்லை. புழுக்கள் இல்லாத, செக்கச் செவேலென்ற அழகிய சிறு இலந்தைப் பழங்கள். அவற்றைக் கொண்டு பாட்டி செய்த இலந்தை வடை மிகவும் சுவையானவை. கடையில் சரம் சரமாக தொங்க விடப் பட்டிருந்த இலந்தை வடைக்கும் பாட்டியின் இலந்தை வடைக்கும் உள்ள ஒரு மிகப் பெரும் வித்தியாசம், அதன் நிறம். கடை வடை கறுப்பாக இருக்கும், பாட்டியின் வடை சிகப்பாக இருக்கும். அச்சிறுவயதில் திண்பதில் தான் ஆர்வம், செய்முறையில் இல்லை. பாட்டி உரலில் இலந்தை பழங்களை இடிக்கும் காட்சி லேசாக நினைவுக்கு வருகிறது. இலந்தையின் புளிப்பும், சிகப்பு மிளகாயின் காரமும் சேர்ந்த புளி+காரச் சுவை இன்றளவும் நாக்கில் ஊறுகிறது. 

சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்த போது எனக்கு இலந்தை வடை கொண்டு வர முடியாததற்கு பாட்டி மிக வருத்தப்பட்டார். காரணம் உரலில் இடிப்பதற்கு அவர் கையில் வலு இல்லை, உரல் இருந்த வீடும் அவரிடம் இல்லை. அம்மா கடையிலிருந்து கருப்பு இலந்தை வடையை வாங்கிக்கொடுத்தார். அவற்றில் புளிப்பு இருந்தது காரம் இல்லை. இம்முறை ஊருக்குச் சென்றால் இலந்தை வடைக்காக வருத்தப்பட பாட்டி இல்லை.

கொடுக்காய்ப்புளி: சிறு வயதில், எங்கள் வீட்டில் இருந்ததை விட தெருவிலும், மற்றவர்கள் வீட்டிலும் வாழ்ந்த நாட்களே அதிகம். எங்கள் வீட்டு எதிர் வீட்டில் ஒரு கொடுக்காய்ப்புளி மரம். அந்த வீட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். மாடியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் கொடுக்காய்ப்புளி மரக்கிளைகள். எட்டாத கிளைகளை உலுக்க தொரட்டிக் கம்பு. எப்போதும் கொடுக்காய்ப்புளி வேட்டை. சில வருடங்களில் அந்த வீடு கைமாறியது. புதிதாக வந்த மனிதர்கள் மாறவில்லை. என் கொடுக்காய்வேட்டை தொடர்ந்தது. அப்பாவின் வேலை நிமித்தமாக மதுரையும் கொடுக்காயையும் விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டியதாயிற்று. நான் வேட்டையாண்ட அந்த கொடுக்காய் மரம் இன்னும் இருக்கிறதா, அல்லது செங்கல்லுக்கும் சிமெண்டிற்கும் வழிவிட்டு போய்ச்சேர்ந்து விட்டதா என்று தெரியவில்லை?

மாங்காய் இஞ்சு: ஒரே செடியில் (வேரில்?) எனக்குப் பிடித்த இரண்டு சுவைகள். இது ஊறுகாய்களின் ‘நிலைய வித்வான்’. சிறு வயதில் வீட்டிற்கு யாராவது திடீர் விருந்தாளியை அப்பா கூட்டிக்கொண்டு வந்து, “என்ன இரவுச் சாப்பாட்டிற்கு ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டால். “மத்தியானம் வச்ச சாம்பார் கொஞ்சம் மிச்சம் இருக்கு, நிலையவித்வான் வச்சுட்டா போச்சு” என்பார். டீ.வி வருவதற்கு முன், எல்லோர் வீட்டிலும் வானொலி ஆட்சி புரிந்து கொண்டிருந்தது.  பெரிய கலைஞர்களின் கச்சேரி இல்லையென்றாலோ, சிறு நேர இடைவெளிகளை நிரப்ப வேண்டுமென்றாலோ “வாத்ய விருந்தா – நிலைய வித்வான்கள் வாசிக்கிறார்கள்” என்று ஆரம்பித்து ஏதாவது இசையை போட்டு சமாளித்து விடுவார்கள். வீட்டில் ஊறுகாய் ஏதும் இல்லை என்றால், மாங்காயிஞ்சிதான் நிலைய வித்வான். செய்வது மிகச் சுலபம் (மாங்காயிஞ்சு + பச்சை மிளகாய் + எலுமிச்சை + உப்பு), ஆனாலும் எவ்வளவு சுவை. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் மாங்காயிஞ்சு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த தடவை முயற்சிக்க வேண்டும்.

விடுமுறையில் மிகவும் குறைந்த நாட்களுக்கே இந்தியா செல்வதால் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களோடு எங்களது பயணம் முடிந்து விடுகிறது. அங்கே, விதவிதமான பீட்சாக்களையும், பாஸ்தாக்களையும், டாகோசையும், பரீட்டோக்களையும் பார்க்க முடிகிறது. நான் சிறு வயதில் விரும்பிச் சாப்பிட்ட இலந்தை வடையையும், கொடுக்காயையும், நுங்கையும் பார்க்க முடியவில்லை. திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் அவை கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை.

என் தேடுதல் சரியில்லையா, அல்லது அமெரிக்காவில் என் வீட்டுப் பக்கத்தில் உள்ள இந்தியப் பலசரக்குக் கடையில் மாவடு ஊறுகாய் கிடைக்கச் செய்யும், சென்னையில் வெஜிடபில் பிரமவேரா கிடைக்கச் செய்யும் உலகமயமாக்கல்  இலந்தை வடையையும் அவை இருந்த பெட்டிக் கடையையும் சாப்பிட்டுவிட்டதா?

(*)———————————-(*)——————————–(*)

பின் குறிப்பு:

வலையில் தேடியதில் கிடைத்த சில சுட்டிகள்:

 இலந்தை (Zizyphus Mauritiana) பற்றிய ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரை.

மாங்காயிஞ்சு (Curcuma amada) பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு.

ஹவாயில் கிடைக்கும் கொடுக்காய்ப்புளி (Pithecolobium dulce)

மாங்காயிஞ்சு ஊறுகாய் போடும் முறை.

→ Leave a CommentCategories: Uncategorized

என் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

August 25, 2008 · 4 Comments

”இந்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” – இந்த கேள்வியை எல்லோரும் வாழ்க்கையில் ஒரிரு முறையாவது நம்மை நாமே கேட்டிருப்போம். நம் கேள்விகளின் வடிவங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் உட்பொருள் ஒன்றுதான். அப்படி ஆராயப்படாத வாழ்க்கை வீண் என்கிறார் சாக்ரடீஸ் (”Unexamined life is not worth living”).

பலருக்கு இக்கேள்வியின் பதில் இவ்வாழ்க்கையில் கிட்டுவதில்லை.  அதன் பயனாக காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் இலையின் மேல் உள்ள எறும்பைப் போன்ற வாழ்க்கை அமைந்து விடுகிறது. சிலருக்கு இக்கேள்வியின் பதில் ஒன்றுமற்ற வெறுமையாக அமைந்து விடுகின்றது. வெறுமை பலரை பைத்தியங்களாக்குகிறது, மற்றும் சிலரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. மிகச் சிலரே இக்கேள்வியின் பதிலை உணர்கிறார்கள். இந்த உணர்தல் சிலரை ஞானிகளாக்கியிருக்கின்றன. சித்தார்த்தன் புத்தனானதும், நரேந்திரன் விவேகானந்தனானதும், வெங்கடராமன் ரமணர் ஆனதும் இந்த உணர்தலினால்தான்.

சுப்பிரமணியன் மகாகவியானதும் இதனால்தான். அவனுக்கு தெளிவான விடை கிடைத்ததா என்று தெரியவில்லை? ஆனால் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்யக் கூடாது என்று மிகத் தெளிவாக இருந்திருக்கின்றான். அவனுடைய பதில் ஒரு கேள்வியாக அமைந்து இருக்கிறது:

தேடிச் நிதந் தின்று – பல

    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

    வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

    வீழ்வே னென்றுநினைத் தாயோ?

சில வருடங்களுக்கு முன் என் கட்டுரையின் தலைப்பைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்தேன். ஈர்க்கும் தலைப்பு. “என் வாழ்க்கையில் என்ன செய்வது?”, “வாழ்க்கையை எப்படி வாழ்வது?” போன்ற தலைப்புக்களை வைக்காமல் இருந்தது எனக்கு பிடித்திருந்தது. வாழ்க்கை என்பது நமக்கு அளிக்கப் பட்ட ஒரு பரிசு போலும், அந்த பரிசை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பொருள் படும்படி இருந்த தலைப்பு வித்தியாசமானதாக இருந்தது.  பலர் “என் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்ற கேள்வியை எப்படி எதிர் கொண்டார்கள் என்பதைப் பற்றிய கட்டுரைகளை கொண்டிருந்தது அப்புத்தகம். புத்தகம் படித்து ஒரிரு ஆண்டுகள் ஆகிவிட்டமையாலும், புத்தகம் பற்றிய விமர்சனம் எழுதுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லையென்பதாலும், சொல்ல வரும் கருத்திற்கு நகர்ந்து விடுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் புத்தகத்தை படித்துப் பாருங்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் கிருஷ்ணனுக்கு பயிற்சி நிமித்தமாக சுவிட்சர்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.  சுவிட்சர்லாந்து  செல்வதற்கு முன் மதுரையில் இருக்கும் தன் பெற்றோரை பார்க்க வருகிறார். அங்கு சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், தன் மலத்தை கொட்டாங்கிச்சியில் எடுத்து உண்ணுவதைப் பார்க்கிறார். இக்காட்சி கிருஷ்ணனை, மிகுந்த மன வேதனைக்குள்ளாக்குகிறது. அப்பெரியவரைத் தடுத்து, பக்கத்திலுள்ள உணவு விடுதியில் உணவு வாங்கிக் கொடுக்கிறார். பெரியவர் வாய் திறந்து நன்றி என்று கூறவில்லை. மாறாக, கலங்கிய கண்களுடன் கிருஷ்ணனைப் பார்க்கிறார். அங்கே கிருஷ்ணன் “என் வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார். அதன் பதில் ”அக்‌ஷயா”.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ”தமிழன் என்று சொல்லடா” என்ற நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ணனைப் பற்றி தெரிந்து கொண்டேன். பெரியவர் மலம் தின்ற நிகழ்ச்சியை அவர் சொல்லும் போது, அம்மலத்திலுள்ள புழு என்மேல் ஊறுவதைப் போல் உணர்ந்தேன். தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டு கொண்ட கிருஷ்ணனை ஒரு ஞானி என்றே நான் உணர்கிறேன்.

கிருஷ்ணனை நான் வணங்குகிறேன்.

→ 4 CommentsCategories: people · tamil
Tagged:

Customer Service Pays?

August 14, 2008 · Leave a Comment

Last weekend, my wife and I went canoeing with our friends. It is a well known fact that New England weather is very unpredictable and this year the statement is being strongly validated by Mother Nature. Our spring was like summer and our summer is like spring, with heavy downpours and thunderstorms.

Anyhow, coming back to our canoeing trip. My friend and I have been planning this for a long time, but couldn’t go because of our scheduling conflicts. Finally we made it last Sunday. Four of us rented a canoe and started rowing down (or up) the Concord river. Ten minutes into our trip, dark clouds rushed in  and started pouring water on us. Luckily, we steered our canoe to a nearby bridge and stayed under it for a while. It was a good experience watching rain drops kissing the river.

Well, we managed to canoe for an hour without getting (much) wet. When we returned the canoe to the dock, the clerk at the counter said “Sir, hope you really enjoyed your canoeing. Its too bad thunderstorms came on your way. Rent for an our is 12 bucks, but since rain ruined your fun, I am going to charge you 7 bucks”. We were pleasantly surprised. In this day and age where big airlines find any possible reason to avoid refunds, here is a small entrepreneur who is willing to pay us back for no fault of his.

And to end the story, On the counter there was a small tin box for tips. Typically we would have paid a buck or two for tips. But after the service we got, we decided to pay the money he gave back to us as tips ($5). I don’t know if i should call it as honesty or customer service. In any case, the canoe company owner/employee got good money and more than that he earned a repeat customer.

Customer Service pays !!!

→ Leave a CommentCategories: fun
Tagged: ,

Joie de vivre

July 31, 2008 · 3 Comments

“Joie de vivre” என்ற ப்ரென்ச் பதத்திற்கு தகுந்த  உதாரணம் தேடிக் கொண்டிருந்தேன். உதாரணத்திற்கு போவதற்கு முன் அப்பதத்தின் பொருளைப் பார்க்கலாம்.  Joie de vivre என்பதற்கு ஆங்கிலத்தில் “joy of living” என்று பொருள். தமிழில் “வாழ்தலின் களிப்பு”, “வாழ்தலின் மகிழ்ச்சி”,  “வாழ்தலின் உற்சாகம்” என்று கொள்ளலாம்.

வலையை பிராய்ந்து கொண்டிருந்த போது ஒரு நல்ல வாழும் உதாரணமாக கமலா கிடைத்தார். இவர் வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து, அனுபவித்துக், வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பால் காரரிடம் பசும்பால் வாங்குவதை கொண்டாடுகிறார்:

காலை நடையின் போது பக்கத்தில் உள்ள பள்ளியின் வாசகங்களில் ஆழ்ந்த பொருள் காண்கிறார்:

தான் வழிபடும் தெய்வத்தின் படத்தை உலகுக்கு காட்டுவதில் பெருமிதம் அடைகிறார்:

வழியில் செல்வோரிடம் அன்பு பாராட்டுகிறார்:

மதிய வேலையில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஆசையாக scrabble விளையாடுகிறார்:

நடைபாதைக் கடையின் அழகில் மயங்குகிறார்:

மொட்டை மாடியில் கண்ணம்மாவைக் கொஞ்சுகிறார்:

இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

Flickrல் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை கொண்டாடுபவரை கொண்டாடுவதில் தவறில்லை.

→ 3 CommentsCategories: people
Tagged: ,

மாமழை போற்றுதும்

July 24, 2008 · 2 Comments

மழைக்குத்தான் எத்தனை உருவங்கள்:

கன்னத்தைப் பூப்போல் வருடும் சிறு குழந்தையாக,

சூரியனோடு கண்ணாமூச்சி விளையாடும் சிறு பிள்ளையாக,

இதமாக உறவாடும் இளம் பெண்ணாக,

பூமியின் காமத் தீயை தணிக்கும் காமேஷ்வரியாக,

ஆத்திரமூட்டும் அடங்காப் பிடாரியாக,

என் காரை அலம்பிவிடும் சேவகனாக,

ஊரைச் சுத்தமாக்கும் துப்புரவுத் தொழிலாளியாக,

பச்சைக்கே பச்சையடிக்கும் போட்டோஷாப்பாக (Photoshop) ……

மாமழை போற்றுதும்…..மாமழை போற்றுதும்.

→ 2 CommentsCategories: இயற்கை · தமிழ்
Tagged:

“Take a shower” (A Zen Story)

July 20, 2008 · 1 Comment

The richest man in the town went to a Zen Master and said “Master, i have everything I ever wanted in life – I have a beautiful wife, a son and a daughter who are like my friends, trustful friends who are like my family, tons of money, and you name it and I have it. The only thing I lack is happiness. People say that you are the happiest man in the earth. And you look like one. What is the secret of your happiness? Can you make me happy?”

The Master said “Take a shower”.

The rich man was puzzled.  But he really wanted to be happy. He wanted to give it a try. He thought it was something related to his bath. He immediately called the finest architect in town and asked him to remodel his bathroom. Within 24 hours he got a remodeled bathroom. He took shower. He was not happy. So he went back to the Master and complained.

The Master said “Take a shower”.

The rich man thought, because Zen is a form of Buddhism and  Buddhism preaches non-violence, he should use organic soaps and shampoo, specifically products that did not use animal fat and products that were not tested on animals. He asked his assistants to buy such products. The assistants had tough time finding products to their master’s specifications. So the rich man ordered to set up a factory to manufacture bathroom products just for his use. He took a long shower. But he was not happy. He went back to the Master.

The Master said “Take a shower”.

This ritual went on for 44 days. The rich man kept on tweaking his bathroom and bathroom related activities. On 45th day, he took a Shower. And became Happy.

Postscript:
All these days when the rich man was taking shower, he was not really taking shower. He was deeply engrossed in his thoughts. He was either living in his past (thinking about his past mistakes) or living in the future (thinking about his  future projects). He never really was ‘present at-the-moment’.  Once he realized this and started ‘being in the present-moment’, he gained Wisdom and became Happy.

→ 1 CommentCategories: Uncategorized
Tagged:

என் வீட்டுத் தோட்டத்தில்

July 8, 2008 · 2 Comments

என் வீட்டு சுட்டிப் பயல் ஒரு இயற்கை விரும்பி.  என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூச்சிகளுக்கும் அவனைப் பிடிக்கும். குறிப்பாக அவனை முத்தமிடுவது அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஒன்று. கஷ்டம் எங்களுக்குத்தான். சுவடைப் பார்த்து – இது கொசு முத்தம், இது எறும்பு முத்தம், இது என்ன முத்தம் என்று தெரியவில்லை ஓடு மருத்துவரிடம் – என்று முத்தங்களுக்கேற்ப செயலாற்ற வேண்டும்.

நான் விதிவசத்தால் விவசாயியானவன் . வீட்டைச்சுற்றி புல்வெளி அதிகம். பெயர் தெரியாத செடிகளும் அதிகம். சில செடிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தால் அவை நம்மை வாட்டி எடுத்துவிடும். சில ஆண்டுகளில், இந்தச் செடிகள் போதாதென்று, என்னுள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி எழுந்து ”தக்காளி போடு, கத்தரிக்காய் போடு” என்று உசுப்பேற்றி விடுவான். நானும் ஏமாந்து போய் தக்காளி பொட்டிருக்கிறேன். என் வீட்டு தக்காளியின் வாளிப்பில் மயங்கியும் போயிருக்கிறேன். எல்லொரையும் போல், “யாமறிந்த தக்காளி ரசங்களிலே, என் வீட்டு ரசம் போல் எங்கும் சுவைத்ததில்லை” என்று பீத்திக் கொண்டும் இருந்திருக்கிறேன்.

தக்காளி

இந்த வருடம் எந்த சாகுபடியும் இல்லை. தக்காளி, கத்தரிக்காய் பாத்திகளில் ஏகப்பட்டச் பெயர் தெரியாச் செடிகள். வசந்தம் போய் வேனிற் காலம் வருவதற்குள் பாதி ஆள் (ஆறடி ஆள்) உயரத்திற்கு கிடு கிடுவென்று வளர்ந்து விட்டன. கூடவே அவற்றுடன் ஒட்டி உறவாட பெயர் தெரியாத பூச்சிகளும் பெறுகின. சுட்டிப் பயலின் முத்தங்களும் அதிகரித்தன.

மண்டிக் கிடந்த புதர்களை பார்க்க மலைப்பாக இருந்தது.  வாரங்கள் உருண்டோடின. புதர்கள் சுட்டிப் பயல் உயரத்தையும் தாண்டிவிட்டன. சென்ற வாரம், ஒருவாறாக இருப்பதிலேயே பெரிய செடியை புடுங்கலாம் என்று பாத்திக்குள் நுழைந்தேன். கைகள் ஒன்றன் பின் ஒன்றாக புடுங்கின. இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை. பாத்தி சுத்தமாகி விட்டது. மன நிம்மதியுடன் ஒரு நல்ல குளியல் போட்டேன். புதர்கள் உணர்த்திய பாடங்களை மனது அசை போட்டது:

  • புதராவதற்கு முன்னமேயே வேண்டா விஷச் செடிகளை களைவது எளிது. நன்றாக வளர்ந்த பின் களைய அதிக உழைப்பு தேவைப்படும். (பு.ஆ: கெடுப்பது சோர்வு்)
  • புதராக வளர்ந்து விட்டால் கலங்காதே. ஒரு செடியை புடுங்க ஆரம்பி, எல்லா செடியும் தானாக வந்துவிடும். (பு.ஆ: சுமையினுக்கு இளைத்திடேல்)

இயற்கை நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கற்றுக் கொண்டேனா? பார்ப்போம்.

→ 2 CommentsCategories: Uncategorized