தொலைக்காட்சி பெட்டியை திருகிய போது முத்துராமனும் விஜயகுமாரியும் ”யமுனா நகரில் தமிழ்ச் சங்கம்” என்று பாடிக்கொண்டு இருந்தார்கள். ஒரு காட்சியில் முத்துராமன் (பொருத்தமில்லாமல்) கிருஷ்ணன் வேடத்தில் வந்தார். கிருஷ்ணனைப் பார்த்தேன். மழு மழுவென்று மழிக்கப்பட்ட முகம் – இல்லை இல்லை – உடம்பு.
கிருஷ்ணரை நான் நேரில் பார்த்ததில்லை. திரைப்படங்கள் மூலமாகத்தான் பரிச்சயம். திரைப்படங்களில் பார்த்த கிருஷ்ணர்களில் ஒருவருக்காவது உடம்பில் மயிர் பார்த்த ஞாபகம் இல்லை. திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும், நாட்காட்டிகளிலும், கோவில்களிலும், பூஜை அறைகளிலும் பார்த்த மற்ற இந்து கடவுளர்களை நினைத்துப் பார்க்கிறேன், ஒருவருக்காவது மார்பில் மயிர் பார்த்த ஞாபகம் இல்லை. சிவனுக்கு ஜடா முடி பார்த்திருக்கிறேன், பிரம்மாவுக்கு நீண்ட தாடி, விஷ்ணுவிற்கு சுருள் சுருளான தலை மயிர். ஆனால் மார்பில் முடி ….உஹூம்….
ராமாராவ் முதல் ப்ரகாஷ்ராஜ் வரை என்ன செய்திருப்பார்கள்…நினைத்துப் பார்க்க பாவமாக இருக்கிறது.
”மல்லார்ந்த திண் தோள்” இருந்தால் மார்பில் மயிர் இருக்கக் கூடாதா? யாருடைய உருவகம் இது? (மார்) மயிர் கடவுள் தன்மைக்கு ஒவ்வாத ஒன்றா? தெரியவில்லை.
நான் என்ன புதுமைப்பித்தனா “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” எழுத? ஏதோ ஏழைக்கேற்ற பிள்ளையார் சுழி
தொடர்புள்ள சுட்டிகள்:
http://www.hinduonnet.com/thehindu/fr/2006/04/21/images/2006042101660104.jpg
http://sacred-earth.typepad.com/photos/uncategorized/2008/03/12/shiva.jpg