“Joie de vivre”
என்ற ப்ரென்ச் பதத்திற்கு தகுந்த உதாரணம் தேடிக் கொண்டிருந்தேன். உதாரணத்திற்கு போவதற்கு முன் அப்பதத்தின் பொருளைப் பார்க்கலாம். Joie de vivre என்பதற்கு ஆங்கிலத்தில் “joy of living” என்று பொருள். தமிழில் “வாழ்தலின் களிப்பு”, “வாழ்தலின் மகிழ்ச்சி”, “வாழ்தலின் உற்சாகம்” என்று கொள்ளலாம்.
வலையை பிராய்ந்து கொண்டிருந்த போது ஒரு நல்ல வாழும் உதாரணமாக கமலா கிடைத்தார். இவர் வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து, அனுபவித்துக், வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பால் காரரிடம் பசும்பால் வாங்குவதை கொண்டாடுகிறார்:
காலை நடையின் போது பக்கத்தில் உள்ள பள்ளியின் வாசகங்களில் ஆழ்ந்த பொருள் காண்கிறார்:
தான் வழிபடும் தெய்வத்தின் படத்தை உலகுக்கு காட்டுவதில் பெருமிதம் அடைகிறார்:
வழியில் செல்வோரிடம் அன்பு பாராட்டுகிறார்:
மதிய வேலையில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஆசையாக scrabble விளையாடுகிறார்:
நடைபாதைக் கடையின் அழகில் மயங்குகிறார்:
மொட்டை மாடியில் கண்ணம்மாவைக் கொஞ்சுகிறார்:
இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.
Flickrல் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை கொண்டாடுபவரை கொண்டாடுவதில் தவறில்லை.






3 responses so far ↓
முத்துலெட்சுமி // August 3, 2008 at 12:56 pm |
அறிமுகத்திற்கு நன்றி.. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
gnani // September 23, 2008 at 2:41 am |
Paravasathil azhnduponaayn. Miga achariyamagavum, adhe samayathil miga miga magizshiyagavum irukku. Nam sondathil ippadi oru pugaipadakkarar endru ninaikka ninakka romba romba sandoshamaga irukku. Ungalin inda kalai Deivam ungallukku kodutta oru varaprasadam aagum endru ninaikiren.
GNANI
Mads // September 29, 2008 at 7:19 pm |
ஞானி:
உங்களது கடிதம் spamல் மாட்டிக்கொண்டுவிட்டது. எனவே மட்டுறுத்தலில் தாமதம். இவர் தங்களது உறவினரா? மிக்க மகிழ்ச்சி.
-மாது.